கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா பகுதியை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். இவர் பா.ஜ.கவின் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர். அவரை சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் கடந்த 26ம் தேதி இரவு கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதொடர்பாக, முஸ்லிம் ஜிஹாதி பயங்கரவதிகளான பெல்லாரியை சேர்ந்த ஷாஃபிக் மற்றும் சவனூர் பகுதியை சேர்ந்த ஜாஹிர் ஆகிய இருவரையும் கேரள காவல் துறையினர் கைது செய்தனர். மத்திய அமைச்சர் ஷோபா, பிரவீன் நெட்டார் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற வேண்டும் என்று கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். பிரவீன் நெட்டார் குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரவீன் நெட்டார் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணை தகவல்கள் வந்த பிறகு அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. வுக்கு கடிதம் எழுதப்படும். கர்நாடக கேரள எல்லையில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இரவு ரோந்து பணி மேலும் தீவிரமாக்கப்படும். சூரத்கல்லில் நடைபெற்ற கொலை குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் மத தலைவர்களை அழைத்து அமைதி கூட்டங்களை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறினார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி சிவமொக்காவில் பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதால் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.