உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டாலுக்கு சில முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 26 அன்று இரவு சுமார் 8:30 மணியளவில் வீடு திரும்பிய பிறகு அவருக்கு ஒரு அநாமதேய கடிதம் வந்துள்ளது. அதில், ‘இது அல்லாஹ்வின் செய்தி, வினீத் ஜிண்டால்; நாங்கள் விரைவில் உங்கள் தலையை துண்டிப்போம்’ என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் டெல்லி காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார். அதை டெல்லி காவல்துறை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்கு முன்பும் இதே போன்ற மிரட்டல் செய்திகள் மற்றும் அழைப்புகள் வந்ததாகவும் அமெரிக்கா, தைவான், கனடா போன்ற நாடுகளில் இருந்து அவை வந்த்தாகவும் ஜிண்டால் டெல்லி காவல்துறைக்கு தாக்கல் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் சிசிடிவி காமிராக்கள் உள்ளது, இருப்பினும் மிரட்டல் கடித்த்தை அங்கு வீசியவர்கள் சிசிடிவியில் சிக்கவில்லை. வினீத் ஜிண்டாலுக்கு ஏற்கனவே டெல்லி காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளதாகவும், அவருக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.