சமாஜ்வாதியுடன் உறவு முறிவு

பகுஜன் சமாஜ் கட்சியில் (பி.எஸ்.பி) தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஓம் பிரகாஷ் ராஜ்பர், பின்னர் தனது சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்.பி.எஸ்.பி) என்ற தனது சொந்தக் கட்சியைத் துவங்கினார். இவ்வாண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்தார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் பா.ஜ.க வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரிப்பதாகத் தெரிவித்ததையடுத்து இருகட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டது. இது பெரிதாகவே, கடந்த சனிக்கிழமையன்று சமாஜ்வாடி கட்சியுடனான தனது கட்சியின் கூட்டணியை ராஜ்பர் முறித்துக்கொண்டதாக அறிவித்தார். இதையடுத்து அவர், தற்போது தனது தாய் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க யோசித்து வருவதாகவும் 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.