ஹிந்துக்கள் மீது முஸ்லிம்கள் வன்முறை

நெதர்லாந்தின் நாடாளுமன்றத்தில் வங்கதேசம் மற்றும் பாரத்த்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முஸ்லிம்கள் நிகழ்த்தும் பயங்கரவாதம், வன்முறைகள் உள்ளிட்ட பிரச்சனையை எழுப்பிய டச்சு சட்டமன்ற உறுப்பினர் கீர்ட் வில்டர்ஸ்ம் ஹிந்துக்களை ஆதரிக்க வேண்டும் என சர்வதேச நாடுகளின் கவனத்தை நாடினார். அவரது உரையின் போது, ​​அவர் ‘நிந்தனை’ கருத்துக்களுக்காக முஸ்லிம்களிடம் இருந்து கடுமையான கொலை மிரட்டல்களை சந்தித்துவரும் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவையும் குறிப்பிட்டார். இதைத்தவிர, டுவிட்டரில்,  ஹிந்துக்கள், அவர்களின் பாதுகாப்புக்கு ஆதரவாக 13 முக்கியமான கேள்விகளை முன்வைக்கும் ஆவணத்தைப் பகிர்ந்துள்ளார். “வங்கதேசம் மற்றும் பாரதத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முஸ்லிம் வன்முறைகள், நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவின்மை மற்றும் ஹிந்து பாதுகாப்பிற்கு சர்வதேச கவனம் மற்றும் ஆதரவு ஆகியவை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் எனது முதல் கேள்விகள்”, ‘ஹிந்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்’ என்று ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில், பாரதம் மற்றும் வங்க தேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களின் பல்வேறு நிகழ்வுகளை பல டுவிட்டர் பயனாளிகள் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். கீர்ட் வில்டர்ஸ், நீண்ட காலமாக தனது நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் வெகுஜன குடியேற்றத்தை எதிர்க்கும் இவர், இந்த வெகுஜன முஸ்லிம் குடியேற்றத்தின் மூலம் அரசு, “இஸ்லாம் என்ற அரக்கனை நாட்டிற்குள் இறக்குமதி செய்கிறது” என்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.