காவல் அதிகாரிகளின் பயங்கரவாதத் தொடர்பு

மூணாறு காவல்நிலையத்தில் இருந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டதாக விசாரணையில் இருந்த மூன்று கேரள காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக மாத்ருபூமி வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. காவல் நிலையத்தில் உள்ள கணினிகளில் இருந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு தகவல்களை கசியவிட்டதாக 3 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த மூன்று அதிகாரிகளில் பி.வி.அலியார், பி.எஸ்.ரியாஸ் ஆகியோர் எர்ணாகுளத்துக்கும், அப்துல் சமத் கோட்டயம் மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூவர் மீதும் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு, அவர்களுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தவுடன், மாவட்ட காவல்துறை தலைவர் மூணாறு டிஎ.ஸ்.பி கேஆர் மனோஜை விசாரணை செய்ய நியமித்தார். மனோஜ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அம்மூவரையும் இடமாற்றம் செய்ய முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரின் அலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு விரிவான ஆய்வுக்காக சைபர் செல்லுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்களின் முக்கியமான தகவல்களை எஸ்.டி.பி.ஐ’க்கு கசியவிட்டதாக கேரள காவலர் பி.கே அனஸ் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையைத் தொடர்ந்து அனஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது. உளவுத்துறை அறிக்கைகளின்படி, அனஸ், 200க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களின் தனிப்பட்ட முக்கியத் தகவல்களை காவல்துறை தரவுத்தளத்திலிருந்து எஸ்.டி.பி.ஐக்கு கசியவிட்டதாக கூறப்படுகிறது. எஸ்.டி.பி.ஐ என்பது முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) அரசியல் முன்னணியாகும்.

செய்தி ஆதாரம்: https://www.opindia.com/2022/07/kerala-munnar-three-police-officers-transferred-leaking-information-terror-outfits/