ஞானவாபி வழக்கு விசாரணை

ஞானவாபி வழக்கு விவகாரத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த வழக்கில், மனு மீதான வாரணாசி நீதிமன்றத்தின் விசாரணை முடிவுக்காக காத்திருப்பதாகக் கூறியது. மேலும், ‘சிரவண’ மாதம் தொடங்குவதால், ஞானவாபியில் உள்ள சிவலிங்கத்திற்கு ஹிந்துக்கள் பூஜை செய்து தங்கள் உரிமையைப் பயன்படுத்த அனுமதி கோரும் மனு மற்றும் ஞானவாபி கட்டமைப்பிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் கார்பன் டேட்டிங் மற்றும் ரேடார் மூலம் தரையில் ஊடுருவி ஆய்வுசெய்யக்கோரி ஏழு ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த மற்றொரு மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது இதுபோன்ற மனுக்களை ஏற்க முடியாது என்று கூறியது. இதையடுத்து வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றார்.