டெல்லியில் ஜஹாங்கீர் புரி பகுதியில் கடந்த ஏப்ரல் 16ம் தேதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடத்திய ஹிந்துக்கள் மீது அப்பகுதி முஸ்லிம்கள் கற்கள், பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தினர், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கியாலும் சுட்டனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறையில் ஏராளமான ஹிந்துக்களும் காவலர்களும் காயமடைந்தனர். இந்த ஜஹாங்கிர்புரி கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறை, குற்றப் பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது. இதில், மூன்று முக்கிய குற்றவாளிகள் உட்பட மொத்தம் 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடிக்க மொபைல் மற்றும் சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்ததோடு, முகம் அடையாளம் காணும் மென்பொருளையும் (எஃப்.ஆர்.எஸ்) பயன்படுத்தியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.