குஜராத் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு முதல், பகவத் கீதையை பிரார்த்தனைகளில் சேர்ப்பது அதன் ஸ்லோகங்களை கூறுவது என்பதன் மூலம் பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகப்படுத்துவதற்கான மாநில கல்வித் துறையின் தீர்மானத்தை எதிர்த்தும் அதனை தடை செய்யவும் கோரி ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு கூறி மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் இந்த கோரிக்கையை பரிசீலிக்க மாட்டோம் என்று கூறி, தடையை வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.