ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘நடப்பு நிதியாண்டின் 2ம் பாதியிலிருந்து நாட்டின் பணவீக்கம் படிப்படியாக குறையும். வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை அடையும் வகையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் கொள்கை முடிவுகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும். குறுகிய கால அளவில் பணவீக்கம் அதிகரிக்கலாம். நடுத்தர கால அளவில் பணவீக்கத்தின் போக்கு ரிசர்வ் வங்கியின் கொள்கைகளால் தீர்மானிக்கப்படும். உரிய நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு பொருளாதாரத்தை வலுவான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இடத்தில் வைக்க வேண்டும். இதற்கேற்ப ரிசர்வ் வங்கி அதன் கொள்கை முடிவுகளை வகுக்கும்’ என கூறியுள்ளார்.