ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில்லை

கர்ப்பிணியருக்கு ஆவின் நெய், பேரீச்சம் பழம், புரோ ஹெல்த் மிக்ஸ் கொண்ட ஊட்டச்சத்து பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியாரிடம் புரோ ஹெல்த் மிக்ஸ் ஊட்டச்சத்து பானம் வாங்கியதால், அரசுக்கு 77 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஆனால், ஆவின் நிறுவனத்தில், புரோ ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படவில்லை என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். பின்னர், ஊட்டச்சத்து பெட்டகத்தில் வழங்குவதற்கு புரோ ஹெல்த் மிக்ஸ் தயாரித்து வழங்குமாறு ஆவின் நிறுவனத்திடம் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார். ஆனால், தற்போது, புரோ ஹெல்த் மிக்ஸில் மருத்துவ குணம் கொண்ட சில பொருட்களை சேர்க்க வேண்டியுள்ளதால், அதை தயாரிக்கும் திட்டத்தை ஆவின் நிறுவனம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல, அரசியல்வாதிகள் அழுத்தம் காரணமாக இந்த முடிவை ஆவின் நிறுவனம் எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அண்ணாமலை, “அரசு நடத்தும் ஆவின் தயாரிப்பு, முன்பு ‘நல்ல பொருள்’ என சான்றிதழ் பெற்றிருந்தது. தமிழக பா.ஜ.க, தி.மு.க அரசு குறித்து அம்பலப்படுத்திய பிறகு ஆவின் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. தற்போது அந்த தயாரிப்பு முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க அரசு தனது தடங்களை மறைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. குறைந்த நிர்வாகத் தரத்திற்கு அளவுகோல்களை அமைத்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.