அக்பர் ஆலம் என்ற முஸ்லிம் நபரிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதாக பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அக்பர் ஆலம் விடுத்துள்ள டுவிட்டர் மிரட்டலில், “கபில் மிஸ்ரா, தீவிரவாதி, உன்னை உயிருடன் விடமாட்டோம். உன்னைச் சுட என் ஆட்கள் முன்பே திட்டமிட்டிருந்தனர்” என கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, ராஜஸ்தானின் உதய்பூரில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஹிந்து தையல் தொழிலாளி கன்னையா லாலின் வீட்டுக்கு சென்று அவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கபில் மிஸ்ரா அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னையா லாலின் குடும்பத்துக்கு உதவ நிதி திரட்ட ரூ. 1 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், ஆனால் ஏற்கனவே ரூ.1 கோடியே 70 லட்சம் வசூல் செய்யப்பட்டுவிட்டதாகவும், மக்கள் தொடர்ந்து பங்களிப்பதாகவும் தெரிவித்தார். அதில், கன்னையா லாலின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும், அது வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் அவரது மகன்களின் படிப்புச் செலவுக்கும் பயன்படுத்தப்படும் கன்னையா லால் கடையில் இருந்த ஈஸ்வர் என்பவரும் இதில் காயம் அடைந்தார். ஈஸ்வருக்கும் ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதையடுத்தே கபில் மிஸ்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.