பெட்ரோல் டீசல் வரி குறைப்பு

தலைப்பை பார்த்ததும், ஏதோ தி.மு.க தலைமையிலான அரசு தான், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப்போகிறது என எண்ணி ஏமாற வேண்டாம். அது கனவிலும் நடக்காது என தமிழக மக்கள் தற்போது உணர துவங்கிவிட்டனர். இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளது மகாராஷ்டிர அரசு. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பதவியேற்ற பிறகு, முதல் முக்கிய அறிவிப்பாக, ‘பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரி கணிசமாக குறைக்கப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும்’ என அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு, முறையே ரூ. 5 மற்றும் ரூ. 10 குறைத்தது. மேலும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் மற்ற சில மாநிலங்களும் கூட வாட் வரியைக் குறைத்தன. ஆனால் தமிழகம் உட்பட ஒருசில எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இதனை செய்ய முன்வரவில்லை.