தீஸ்தாவை விசாரிக்கும் எஸ்.ஐ.டி

சமூக ஆர்வலர் என்ற போர்வையில், கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின் பேரில் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பையில் கைது செய்து அகமதாபாத் அழைத்துச்சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவருடன் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குஜராத் காவல்துறை தரப்பில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டுள்ளது. சீதல்வாட் தீஸ்தாவின் வெளிநாட்டு தொடர்புகள், அவரது வங்கிக் கணக்குகள், அவரோடு தொடர்புடையவர்கள் குறித்தும் இந்த சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்யும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.