உத்தர பிரதேச மாநிலத்தில், காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் விரிவாக்கத் திட்டத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.கோயில் வளாகம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பிரம்மாண்டமான முறையில் கோயில் வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.அதன்பின், கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.”விஸ்வநாதர் கோயில் வளாகம் விரிவாக்கத்துக்குப் பிறகு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.71 லட்சம் நன்கொடை வசூலானது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.5.45 கோடிநன்கொடை வசூலாகியுள்ளது’’ எனகோயில் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா தெரிவித்துள்ளார். பெயர் தெரியாத பக்தர் ஒருவர் நன்கொடை அளித்த 60 கிலோ தங்கத்தைக்கொண்டு இக்கோயிலின் கோபுரம் மற்றும் உள் பிரகாரத்திற்கு சமீபத்தில் தங்கக்கவசம் சாற்றப்பட்டது நினைவு கூரத்தக்கது.