கல் எறிந்தால் பணம் பிரியாணி

நுபுர் சர்மா விவகாரத்தை முன்னிட்டு ஜூன் 3 அன்று வெடித்த கான்பூர் வன்முறைக்கு நிதியளித்ததற்காக கடந்த புதன்கிழமை பாபா பிரியாணியின் உரிமையாளர் முக்தர் பாபா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிறப்பு நடவடிக்கை குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘அந்த பயங்கரவாத கும்பல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, முன்கூட்டியே தெளிவாக திட்டமிடப்பட்டது. கல் வீசுபவர்களுக்கு வன்முறையில் ஈடுபட 500 முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்பட்டது. அந்த வன்முறையை ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்ட 16 முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு அதில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. கல் வீச்சு மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு வன்முறையில் பயன்படுத்தப்பட்ட சிறுவர்களுக்கு பணம் கொடுத்து பிரியாணி பரிமாறப்பட்டது. வன்முறைகளை மேற்பார்வையிட்டவர்கள் எனது கடையில் அமர்ந்துதான் வன்முறைச் சம்பவங்களை வீடியோ அழைப்பில் நேரடியாகப் பார்த்தார்கள்’ என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்த பயங்கரவாத செயல்களுக்கு உதவியவர்கள், ஈடுபட்டவர்கள் என உதவிய பல குற்றவாளிகளின் பெயர்களையும் முக்தார் பாபா பட்டியலிட்டார். இதற்கிடையில் சில உள்ளூர் தலைவர்கள் பாபா பிரியாணி நினிறுவனம் ஒரு கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது. முக்தாரும் அவரது கூட்டாளிகளும் தங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தக்கவைத்துக்கொள்ள நீண்ட காலமாக வன்முறையைத் திட்டமிட்டு வந்தனர் என தெரிவித்தனர். அரசின் பதிவுகளின்படி, அந்த உணவகம் இருக்கும் நிலம் ராம் ஜாங்கி கோயிலுக்குச் சொந்தமானது. பிரியாணி உணவகத்தை கட்டுவதற்காக பிரதான கோயில் மற்றும் 18 ஹிந்து கடைகள் இடித்து தள்ளப்பட்டது என தெரியவந்துள்ளது.