செஸ் ஒலிம்பியாட் ஜோதி

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட்டின் ஜோதி ஓட்ட நிகழ்வு தரம்சாலாவை வந்தடைந்தபோது அதை வரவேற்கும் நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்  தலைமை விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன் முறையாக ஜோதி ஓட்ட நிகழ்ச்சி பாரதத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 188 நாடுகளைச் சேர்ந்த 2000த்திற்கும் மேற்பட்ட வீரர்களும்,1000த்திற்கு மேற்பட்ட அதிகாரிகளும் பாரதம் வருகை தருவார்கள். பாரதம் முழுவதும் செஸ் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வேன்’ என்று உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில்  பள்ளி மாணவர்கள், தரம்சாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தடகள வீரர்கள், நேரு யுவகேந்திர தன்னார்வலர்கள், ஹிமாச்சல் செஸ் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட 500 பேர் கலந்துகொண்டனர். செஸ் கிராண்ட் மாஸ்டர்  தீப் சென்குப்தா, தான் வைத்திருந்த ஜோதியை அனுராக் தாக்கூரிடம் வழங்கினார்.