அரசு வாகனத்தில் மத சின்னங்கள்

ஐயப்பன் புனித பூமியான சபரிமலை கோயில் அருகே பம்பையில் ஒரு காவல்துறை வாகனத்தில் முஸ்லிம் மதச் சின்னங்கள் இடம்பெற்றிருந்தன. காவல்துறை உள்ளிட்ட அரசு வாகனங்களில் மத, அரசியல் மற்றும் வகுப்புவாத எழுத்துக்கள் அல்லது அடையாளங்கள் இருக்ககூடாது என்ற சட்டத்தை மீறி வேண்டுமென்றே கோயில் அருகே இந்த சின்னங்கள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காவல்துறை வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையான நிலையில், இந்தச் செய்தியை கேரளாவில் உள்ள ஜனம் டிவி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறை வாகனங்களில் மதச் சின்னங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு டி.ஜி.பி உத்தரவிட்டார். அத்தகைய ஸ்டிக்கர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. அப்படி நடந்தால், ஓட்டுநரும் அதிகாரியும் இதற்கு சமமாகப் பொறுப்பாவார்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த ஸ்டிக்கர் அப்புறப்படுத்தப்பட்டது.