பிரிவினையை தூண்டும் ஜெகத் காஸ்பர்

கத்தோலிக்க பாதிரி ஜெகத் காஸ்பர் ராஜ்,  சமூக ஆர்வலர்கள் மன்றத்தின் (சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம்) பதாகையின் கீழ் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கிடைத்த ஆதாரங்களின்படி, புல்டோசர்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதே கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் என தெரிகிறது. இக்கூட்டத்தில் , ஜெகத் காஸ்பர் உடன் இணைந்து கலந்துகொண்ட பேச்சாளர்களில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் ஐ.ஏஎ.ஸ் அதிகாரி  சசிகாந்த் செந்தில். சில பெரியாரிஸ்ட்டுகள், தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சில முஸ்லிம் அமைப்புத் தலைவர்கள் உள்ளிட்டோரும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இகூட்டத்தில் பேசிய ஜெகத் காஸ்பர், நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், நான் பட்டியலின பழங்குடியினரோ அல்லது முஸ்லிமோ கிடையாது. இந்த இரு சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து அரசிடம் கேளுங்கள். நீங்கள் 40 சதவீதமாக இருந்தால், 40 சதவீத நிலத்தை பிரித்து தர வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை. 40 சதவீதத்துடன் நாங்கள் நிம்மதியாக வாழ்வோம். முஸ்லிம்கள் 20 சதவீத நிலம் கேட்டாலும், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா அளவுக்கு நிலம் பெறுவீர்கள். நாடாளுமன்றத்தில் எங்களுக்கு இடமில்லை. எனவே எங்களுக்கு 20 சதவீத நிலம் கொடுங்கள், இல்லை என்றால் சஹாரா பாலைவனம் கொடுங்கள். அதை நீங்கள் அவர்களிடம் கேட்கலாம் என்று நாட்டில் பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டார். மேலும், அவரது பேச்சில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு வாதங்களும் நிரம்பியிருந்தன. தி.மு.க ஆதரவாளரும் கனிமொழியின் நெருங்கிய ஆதரவாளருமான ஜெகத் காஸ்பர், 2006ம் ஆண்டு விடுதலை புலிகள் பயங்கரவாத இயக்கத்தினருக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டியது, விடுதலை புலிகளை தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அமெரிக்க புலனாய்வு நிறுவனமாக எப்.பி.ஐயால் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரடீஸின் நெருங்கிய கூட்டாளி. 2013ல், பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு, எல்.டி.டி.இ செயல்பாட்டாளரான ஜெகத் காஸ்பர் மீதான உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியிருந்தார். அதில், ஜெகத் காஸ்பர் ஒரு எல்.டி.டி.இ பயங்கரவாத அமைப்பின் செயல்பாட்டாளராக இருப்பவர், அமெரிக்க அரசு அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. எப்.பி.ஐ அவரைத் தேடி வருகிறது. இதையடுத்து அவர் பாரதத்துக்கு தப்பி வந்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார். ஜெகத் காஸ்பர் தலைமையிலான சர்வதேச தமிழ் மையம் மற்றும் தமிழ் மைய்யம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சமீபத்திய இவரது இந்த தேசப்பிரிவினை பேச்சு சம்பந்தமாக அவர் மீது மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.