அக்னிவீரர்களை வரவேற்கும் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது நிறுவனம் பயிற்சி பெற்ற மற்றும் திறமையான அக்னி வீரர்களை பணியில் நியமிக்கும் என்று அறிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், “அக்னிபத் நிகழ்ச்சியை சுற்றி நடந்த வன்முறையால் வருத்தம் அடைகிறேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோதும் ​​நான் கூறினேன், இப்போது மீண்டும் நான் சொல்கிறேன்; அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது. தலைமைத்துவம், குழுப்பணி என நிர்வாகம் முதல் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரை அனைத்து வாய்ப்புகளும் அக்னி வீரர்களுக்கு உள்ளன. அக்னிவீரர்கள் ஆயுதப் படைகளில் நான்கு ஆண்டுகள் கடமையாற்றும் போது நிறைய அனுபவங்களைப் பெறுவதோடு பல்வேறு திறன்களையும் வளர்த்துக் கொள்வார்கள். இந்தத் திறன்களும் அனுபவமும் அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபடுவதற்கு உதவும்” என தெரிவித்துள்ளார்.