முதல்வர் சகோதரர் வீட்டில் சோதனை

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். உரம் ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்திருப்பது தொடர்பாக அக்ராசென் கெலாட்டை அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ அதிகாரிகள் சில காலமாக கண்காணித்து வந்தனர். முன்னதாக கடந்த 2007 முதல் 2009ம் ஆண்டுவரை அக்ராசென் அதிகமான அளவில் உரங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியிருந்தது. இந்த உரம் ஏற்றுமதி ஊழல் வழக்கில், ஏற்கெனவே அமலாக்கப்பிரிவு விசாரணையை, சராபஸ் இம்பெக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தொடங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனுபம் கிரிஷி என்ற நிறுவனம் அக்ராசென் கெலாட் மூலம் நடத்தப்படுவதாகும். இந்த நிறுவனம் பொட்டாஷ் உரத்தை சராபஸ் இம்பெக்ஸ் நிறுவனம் மூலம் ஏற்றுமதி செய்துள்ளது. வழக்கம்போல இந்த சோதனையையும் பழிவாங்கும் நடபவடிக்கை என கூறி காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.