மக்கள் நம்பிக்கையை பெற்ற டிடி நியூஸ்

தூர்தர்ஷனின் செய்தி அலைவரிசைகளும், அகில இந்திய வானொலியின் செய்திகளும் மிக உயர்ந்த நம்பிக்கையைப் பெற்றிருப்பதாக ராய்ட்டர் நிறுவனத்தின் அண்மைக்கால அறிக்கைத் தெரிவிக்கிறது. ராய்ட்டர் நிறுவனத்தின் டிஜிட்டல் நியூஸ் அறிக்கை 2022ல், ’46 நாடுகளிடையே ஒட்டுமொத்த நிலைமையில் பாரதம் செய்திகளின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. டிடி நியூஸ், அகில இந்திய வானொலி ஆகிய அரசுத்துறை ஒலிபரப்பு அமைப்புகளின் பாரம்பரியம் தொடர்ந்து உயரிய நம்பிக்கையை பெற்றுள்ளது. பாரத செய்தி நிறுவனங்கள் குறித்த ஆய்வில் அதிகாரபூர்வமான, துல்லியமான செய்திகளுக்கு அனைவரின் நம்பிக்கைய’ பெறுவதில் அகில இந்திய வானொலி 72 சதவீதத்தையும், டிடி நியூஸ் 71 சதவீதத்தையும் எட்டியுள்ளன. இந்த நம்பிக்கைக்கு இவற்றின் டிஜிட்டல் முறை முக்கியமான காரணமாக உள்ளது. உலகின் மக்கள் தொகையில் பாதியைக் கொண்டுள்ள 46 நாடுகளைச் சேர்ந்த 93 ஆயிரத்துக்கும் அதிகமான இணையவழியாக செய்திகளை அறிவோரிடம் நடத்திய “யுகவ்” ஆய்வு அடிப்படையில் இந்த டிஜிட்டல் நியூஸ் அறிக்கை 2022 தயாரிக்கப்பட்டது’ என ராய்ட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம், பாரதத்தின் மிகப்பழமையான அரசுத்துறை ஒலிபரப்பு நிறுவனம் அதன் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.