அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பாதுகாப்பு நிபுணரான ராதா ஐயங்கார் ப்ளம்பை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் கையகப்படுத்துதல் மற்றும் நிலைநிறுத்தலுக்கான துணைச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளார். தற்போது பாதுகாப்பு துணை செயலக அதிகாரியாக பணியாற்றி வரும் ராதா ஐயங்கார், இதற்கு முன்பு, கூகுள் நிறுவனத்தில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு இயக்குநராக பணியாற்றினார். வணிக பகுப்பாய்வு, தரவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவற்றில் அவர்களின் குறுக்கு செயல்பாட்டு குழுக்களை வழிநடத்தினார். அதற்குமுன்பு முகநூல் நிறுவனத்தில் கொள்கை பகுப்பாய்வின் உலகளாவிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அங்கு அவர் அதிக ஆபத்து, அதிக தீங்கு விளைவிக்கும் முக்கியமான சர்வதேச பாதுகாப்பு சிக்கல்களில் கவனம் செலுத்தினார். ரேண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மூத்த பொருளாதார நிபுணராகவும் இருந்துள்ளார், மேலும், அவர் பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை மற்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த பல மூத்த பதவிகளை வகித்துள்ளார். முன்னதாக, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் BS பட்டம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் MS பட்டம் பெற்றுள்ள அவர், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.