நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தியது. நாக்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஷேக் உசேன், பிரதமர் மோடி நாயை போல மரணமடைவார் என்பது உள்ளிட்ட மிகவும் தரக்குறைவான, அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து மகாராஷ்டிர பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் பதிவு செய்தனர். இதுகுறித்து பேசிய பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவான்குலே, “மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு ஷேக் உசேனுக்கு எதிராக புகாரை பதிவு செய்ய வேண்டாம் என்று காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் உசேன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றக் கதவுகளைத் தட்டுவோம். மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.