நுபுர் ஷர்மா கூறிய கருத்தை சாக்காக வைத்து மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நிகழ்த்தி வரும் வன்முறைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ராஜர்ஷி பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலத்தில் வெடித்துள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையால் முடியாமல் போனால் மேற்கு வங்க அரசு மத்திய ரிசர்வ் படைகளை அழைக்க வேண்டும் என்று கடிந்துகொண்டது. மேலும், சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகள் வன்முறை சம்பவங்களின் வீடியோ காட்சிகளை உடனடியாக சேகரித்து தாக்கல் செய்ய வேண்டும். இதனால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியது. முன்னதாக, நிலாத்ரி சாஹா என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்த வன்முறைகளில் பா.ஜ.க அலுவலகங்கள் திட்டமிட்ட ரீதியில் எரிக்கப்படும் போது காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டியதுடன் நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் அல்லது மத்திய துணை ராணுவப் படைகளை அனுப்புமாறு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.