ஏர் ஏசியா இந்தியாவில் முழு பங்குகளையும் பெற ஏர் இந்தியா சிசிஐ அனுமதியைப் இந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி, டாடா சன்ஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனமான டலேஸ் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து ரூ.18,000 கோடி பங்கு மற்றும் கடன் ஒப்பந்தத்தில் வாங்கியது. இந்நிலையில், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளையும் கையகப்படுத்த டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. இதற்காக இந்தியப் போட்டி ஆணையத்திடம் (சி.சி.ஐ) விண்ணப்பித்தது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் டாடா நிறுவனம் வாங்க சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், 139 கோடி ரூபாய்க்கு ஏர் ஏசியாவின் 16.3 சதவீத பங்குகளை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனம் பாரதத்தில் சுமார் ஒன்பது வருடங்களாக இயக்கி வந்த தனது விமான சேவையை விட்டு முற்றிலும் வெளியேறுகிறது.