அண்ணாமலை எபெக்ட்

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற ரத்ததான தின நிகழ்வில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து மாவு குறித்து குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் L1வாக வந்துள்ளதால் அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ் கோட் நிறுவனம் L2வாக வந்துள்ளது. எனவே அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. அண்ணாமலை கூறிய நபருக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. விதிகளுக்கு உட்பட்டு, மற்றொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை ஆவின் நெய் ரூ. 191.41க்கு கொடுக்கப்பட்டது. தற்போது ரூ. 219.50க்கு வழங்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.