டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியது சர்ச்சையாக்கப்பட்ட நிலையில் டெல்லி காவல்துரையினர் நுபுர் ஷர்மா, நவீன்குமார் ஜிண்டால், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, சுவாமி யதி நரசிங்கானந்தா, சபா நக்வி, பூஜா ஷகுன் பாண்டே, ஷதாப் சவுகான், மௌலானா முஃப்தி நதீம், அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி, அனில் குமார் மீனா உள்ளிட்டோர் மீது வெறுக்கத்தக்க செய்திகளைப் பரப்புதல், பல்வேறு குழுக்களைத் தூண்டிவிடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.  சமூக ஊடகங்களில் பொய் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிரது. அண்மையில் நுபுர் ஷர்மா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.