பின்வாங்கிய மற்றொரு அமைச்சர்

நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘பள்ளி கல்வித் துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார். பள்ளிக் கல்வித்துறையின் இந்த முடிவுக்கு பொதுமக்கள், தமிழக பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க என பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் அறிவிப்பில் இருந்து பின்வாங்கினார். அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் வழக்கம்போல தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டாக அவர்களது செயல்பாடுகள், ஊழல்களை தமிழக பா.ஜ.க அவ்வப்போது வெளிப்படுத்தி வருவதால் தீபாவளி ஸ்வீட், பி.ஜி.ஆர் நிறுவனம், ஆவின் நெய், தருமை ஆதீன பல்லக்கு விவகாரம், ஆவின்  ஹெல்த் மிக்ஸ் என பல விஷயங்களில் தி.மு.க அமைச்சர்கள் தொடர்ந்து பின் வாங்கி வருவது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.