கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதை எதிர்த்து மாநிலத்தில் ஒரு கடையடைப்பு நடைபெற்றது. இந்த கடையடைப்பை தூண்டியதாக ஹிந்து ஐக்கிய வேதி தலைவர் கே.பி.சசிகலா டீச்சர் என அழைக்கப்படும் கே.பி.சசிகலா மற்றும் சபரிமலை கர்ம சமிதியின் எஸ்.ஜே.ஆர். குமார் மீது கேரள அரசு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான், கே.பி.சசிகலா மற்றும் எஸ்.ஜே.ஆர். குமார் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பால் சரியாக நிரூபிக்கப்படவில்லை. சாட்சிகளின் வாக்குமூலங்கள் எதிலும் மனுதாரர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. மனுதாரர்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்ற வெறும் அறிக்கையைத் தவிர, மனுதாரர்களின் குற்றத்தை சுட்டிக்காட்டும் சாட்சிகள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மனுதாரர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருப்பது சட்டத்தின் செயல்முறையை தெளிவாக துஷ்பிரயோகம் செய்வதாகும். எனவே, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்கிறது என அறிவித்தார்.