மண்ணை காப்போம் இயக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ‘பல அரசு திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு செல்கின்றன. கரியமில வாயு வெளியேற்றத்திற்கு வளர்ந்த நாடுகளே காரணமாக உள்ளன. மிகப்பெரிய நாடுகள் பூமியின் வளங்களை மிக அதிகமாக சுரண்டுகின்றன. பருவநிலை மாற்றத்தில் பாரதத்தின் பங்கு மிகக்குறைவுதான் என்றாலும் பாரதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 மாதங்களுக்கு முன்பே, பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தை நாம் எட்டியுள்ளோம். முந்தைய காலங்களில், மண்ணின் வளம் குறித்து விவசாயிகளுக்கு தெரியாமல் இருந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வாக, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டைகள் வழங்குவதற்கு மிகப்பெரிய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. டந்த 8 ஆண்டுகளில் 20 ஆயிரம் சதுர கி.மீ.,க்கு மேல் வனப்பரப்பளவு அதிகரித்துள்ளது. இவ்வருட நிதிநிலை அறிக்கையில் கங்கை நதி வழித்தடத்தில் இயற்கை வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.