பாரத்மாலா பரியோஜனா என்பது 5.35 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 34,800 கி.மீ தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை மேம்படுத்தும் பாரதத்தின் மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு திட்டமாகும். இதுகுறித்து பேசிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயா, ‘நடப்பு நிதியாண்டில் 5,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் இலக்கை அடைவதில் நம்பிக்கையுடன் உள்ளோம். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த நிதியாண்டில் மொத்தம் 6,306 கி.மீ நீளத்திற்கு சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதுடன் 4,325 கி.மீ நீள நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது. நெடுஞ்சாலை உள்கட்டமைப்பிற்காக ஆணையத்தின் மூலதனச் செலவீனம் கடந்த நிதியாண்டில் ரூ.1,68,770 கோடியை எட்டியுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் கி.மீ நீலத்துக்கும் அதிகமான சாலை ஒப்பந்தங்களை வழங்க முடியும். 20,368 கி.மீ நீளமுள்ள 576 திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.