ஜீ ஹிந்துஸ்தான் தொலைக்காட்சி, வாரணாசியில் உள்ள ஞானவாபியில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டிடம் தொடர்பாக ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது. அது கடந்த மே 29 அன்று ஒளிபரப்பானது. அதில், சர்ச்சைக்குரிய கட்டமைப்பைப் பற்றி கருத்துக்கள் அறிய முஸ்லிம் சாமியார்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களிடம் சேனல் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் குறித்து முஸ்லிம் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஸ்டிங் ஆபரேஷன் வெளிப்படுத்தியது. ஸ்டிங் ஆபரேஷனின் போது, நிருபர் பல தலைவர்கள், மௌலானாக்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் ஞானவாபி தொடர்பாக பேசினர். தாருல் உலூம் தியோபந்தின் மௌலானா அஃப்சர் கானிடம் பேசுகையில், “நான் உண்மையுடன் இருக்கிறேன். சிவலிங்கம் இருந்தால், அதைத் திரும்பக் கொடுக்க வேண்டும்” என்றார். ஸ்டிங் ஆபரேஷனைத் தொடர்ந்து, ஒரு விவாதத்தின் போது, ராஷ்டிரிய பங்கர் நடவடிக்கைக் குழுவின் தலைவரான சர்ஃபராஸ், ‘ஞானவாபியில் சிவலிங்கம் இருப்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தால், அதை என்றோ இடித்துவிட்டு வளாகத்திலிருந்து அகற்றியிருப்பார்கள்’ என்று கூறினார். மேலும், ‘இதை நான் முன்பே பதிவு செய்யவில்லை, மேலும் சிவலிங்கம் இருப்பதாக எங்களுக்குத் தெரிந்திருந்தால் அதை இடித்து வளாகத்திலிருந்தே அகற்றியிருப்போம் என்று இந்த பதிவில் சொல்கிறேன்’ என்றார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிக்கும்போதுகூட சர்ப்ராஸின் முகத்தில் எவ்வித குற்ற உணர்ச்சியோ வருத்தமோ இல்லை. அப்போது அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.