தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘திமுக அரசின் நியாயமற்ற நடவடிக்கை. மாநிலத்தின் மக்களின் நலன்களுக்கு மேலாக தமிழக அரசு, தனது ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஆணவத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது வெட்கக்கேடானது. முதல் முறையாக, பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசின் மாநில வாட் வரி, கலால் வரியை விட அதிகமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயையும் குறைக்க வேண்டும். ஒரு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம். வழங்க வேண்டும். இதன் மூலம் அவர் தன் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மே 2020ல் நிறைவேற்றப்பட்ட அரசாணையை மாற்றியமைத்து, மாநில வாட் வரியை விலையின் சதவீதத்தில் அமல்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளையும் பட்டியலிட்டுள்ளார்.