பா.ஜ.க நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பயிற்சி

பா.ஜ.க தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ், ‘பா.ஜ.க என்பது ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் கட்சி. இப்போது, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் பற்றி அறியாத பலரும் கட்சி பொறுப்புக்கு வந்திருப்பதால், அவர்கள் அனைவரும், ஏழு நாட்கள் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் ஆரம்ப நிலை பயிற்சி முகாமை முடிக்க வேண்டும். ஆரம்ப நிலை பயிற்சி முகாம் மாவட்ட அளவிலும், முதலாம், இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள் மாநில அளவிலும், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் நாக்பூரிலும் நடக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியாக முகாம்கள் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருப்பவர்கள், இந்த நான்கு பயிற்சி முகாம்களையும் முடிப்பதை தங்களின் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருப்பார்கள். முகாம் முடியும் வரை யாரும், எதற்காகவும் வெளியே வர முடியாது என்பதால், பா.ஜ.க நிர்வாகிகள் பலர் இந்த முகாம்களுக்கு செல்வதில்லை. ஆனாலும், பா.ஜ.கவின் சித்தாந்தத்தை தெரிந்து கொள்ளவும், கட்டுப்பாடு, ஒழுக்கம், திட்டமிடல், நிர்வாக திறமை போன்ற ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ளவும், பா.ஜ.க நிர்வாகிகள் ஆரம்பநிலை பயிற்சி முகாமை முடிக்க வேண்டும்’ என அறிவுறுத்தியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.