பி.எப்.ஐ தீவிரவாதிகள் மீது வழக்குப் பதிவு

22 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) தலைவர்களான அப்துல் ரசாக் பீடியக்கல் என்ற அப்துல் ரசாக் பிபி மற்றும் அஷ்ரப் காதிர் என்ற அஷ்ரப் எம்கே ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இருவரும் கேரளாவைச் சேர்ந்த பி.எப்.ஐ அலுவலகப் பணியாளர்கள்.  அதன்படி, இவர்கள் கேரளாவின் மூணாறில் மூணார் வில்லா விஸ்டா திட்டம் என்ற ஒரு வணிக அமைப்பை நிறுவினர், அதன் மூலம், வெளிநாட்டு கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி அதனை அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். மேலும் இவர்கள் பயங்கரவாத குழுவை உருவாக்குவதில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாண்டு மார்ச் மாதம், மலப்புரத்தில் உள்ள பி.எப்.ஐ அமைப்பின் பெரும்படப்பு பிரிவின் பிரிவுத் தலைவரான ரசாக், நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கோழிக்கோடு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் டெல்லியில் அஷ்ரப் கைது செய்யப்பட்டார். ரசாக் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சுமார் 34 லட்ச ரூபாயை பி.எப்.ஐ அமைப்பின் ரீஹேப் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கு மாற்றியுள்ளார். எஸ்.டி.அப்.ஐ கட்சியின் தலைவரான எம் கே ஃபைசிக்கு ரூ. 2 லட்சத்தை மாற்றியுள்ளார் கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச காவல்துறை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ உறுப்பினர் அன்ஷாத் பதருதீனுக்கு 3.5 லட்சம் செலுத்தியதிலும் இருவருக்கும் தொடர்புள்ளது என அமலாக்கத்துறை கூறுகிறது. மேலும் பல்வேறு வெளிநாட்டு சொத்துக்களை பி.எப்.ஐ தலைவர்கள் வாங்கியது குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது.  அன்ஷாத் பதருதீனுடன் கைதான பி.எப்.ஐ உறுப்பினர் பிரோஸ் கானிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், 32 போர் துப்பாக்கி மற்றும் 7 குண்டுகள் கைப்பற்றப்பட்டன என்பதும், பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகியவை வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவை தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்ல என்றும் கேரள உயர்நீதிமன்றம் கூறியதும் நினைவு கூரத்தக்கது.

செய்தி ஆதாரம்: https://www.opindia.com/2022/05/ed-prosecution-case-2-pfi-leaders-laundering-rs-22-cr-firm-munnar-radical-activities/