கேரளாவில் மிக விமர்சையாக நடைபெறும் பழம்பெரும் பூரம் திருவிழாவின் போது திருச்சூரில் விநியோகிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் உருவம் கொண்ட பலூன்கள் மற்றும் முகமூடிகளை கேரள காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹிந்து மகாசபா மாநில தலைவர் கிஷன் சிஜி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். மேலும், ஹிந்து மகாசபையின் திருச்சூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பலூன்கள் மற்றும் முகமூடிகளையும் அழித்தனர். முன்னதாக, சி.பி.எம் இடதுசாரிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, பரமேக்காவு தேவஸ்தானத்தின் குடை மாற்றும் விழாவில் வீர் சாவர்க்கரின் உருவம் தாங்கிய குடைகள் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது மிகமுக்கியப் பங்காற்றிய பாரத விடுதலைப் போராளியான வீர் சாவர்க்கரும், ஹிந்து தேசியவாதத் தத்துவத்தை வகுத்த அரசியல் மேதையுமான வீர் சாவர்க்கர் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் கேரளாவில் இரண்டு தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன. சுவாரசியமாக, இந்த இரண்டு சம்பவங்களும் பூரம் என்ற ஹிந்து பண்டிகை கொண்டாடப்படும் போது நிகழ்ந்துள்ளது.