நீதிபதிக்கு அச்சுறுத்தல்

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிக்குமார் திவாகர், ஞானவாபி மசூதி வளாகம் முழுவதையும் வரும் 17ம் தேதிக்குள் வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், முஸ்லிம் அமைப்பின் கோரிக்கையான ஆய்வுக் குழு தலைவர் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்ற அவசியமற்ற கோரிக்கையையும் நிராகரித்தார். இதனையடுத்து முஸ்லிம்களல் நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு மரண அச்சுறுத்தல்கள் வருகிறது. இதுகுறித்து பேசிய அவர், ‘ஞானவாபி விவகாரத்தால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் வருகிறது. நான் தினமும் வெளியே செல்லும்போது, எனது மனைவியும் குடும்பத்தினரும் எனது உயிர் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். ஞானவாபி மசூதி வளாகத்தினை நேரில் ஆய்வு செய்ய போகிறேன் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதை பார்த்த எனது தாயார், அங்கு செல்ல வேண்டாம் என கூறுகிறார்’ என தெரிவித்துள்ளார்.