கேரளாவை சேர்ந்த முன்னாள் மௌலானாவான அஸ்கர் அலி, சமீபத்தில் முஸ்லிம் மதத்தைத் துறந்து வெளியேறினார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அவர் போகக்கூடாது என்று அவரது உறவினர்களே அவரை தாக்கி கடத்த முயன்றனர். எனினும் அதில் இருந்து தப்பி முஸ்லிம் மதத்தில் உள்ள தீவிரவாத கருத்துக்களை அம்பலப்படுத்திய அஸ்கர் அலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. கேரள மாநிலம் கொல்லத்தில் எசன்ஸ் குளோபல் என்ற அறிவியல் சுதந்திர இயக்க அமைப்பினருடன் இணைந்து அஸ்கர் அலி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அந்த நேரலை வீடியோ குறித்த கருத்துப் பதிவின்போது அஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த ஆதாரத்தை வெளியிட்டுள்ள எசென்ஸ் குளோபல் அமைப்பினர், இது இஸ்லாம் ஆட்சி செய்யும் நாடு அல்ல. பாரதம் ஒரு ஜனநாயக நாடு. இங்கு எந்த மதத்தையும் திணிக்க முடியாது என தெரிவித்தனர். கருத்துச் சுதந்திரம், உடை அணியும் உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் ஏன் அஸ்கருக்கு பேச்சு சுதந்திரம் கொடுக்கத் தயாராக இல்லை? என்றும் கேள்வி எழுப்பினர். இது போன்ற கொலை மிரட்டல்கள் அரசியல் சாசனத்திற்கு சவால் விடுகிறது. கொலைமிரட்டல் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டபோது, மதத்திற்கு எதிராக இதுபோன்ற விஷயங்களைச் சொல்ல முடியுமா என்று காவல்துறையினர் கேட்டனர் என எசென்ஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.