மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஒரு மசூதியில் சிவன் மற்றும் விநாயகர் சிலையை மறைத்து வைத்துள்ளதாக மகாமண்டலேஷ்வர் சுவாமி அதுலேசானந்த் ஜி மகராஜ் கூறியிருந்தார். தொல்லியல் துறையும் இப்போது அந்தக் கூற்றை உறுதி செய்துள்ளது. அந்த இடம் ஒரு சிவன் கோயிலாக இருந்தது. பின்னர் அது மசூதியாக மாற்றப்பட்டது என தொல்லியல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக இடிக்கப்பட்ட கோயில் சிதிலங்கள், மசூதியில் தற்போதுள்ள கோயில் சுவர் போன்ற ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.