குஜராத்தில் உள்ள அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் மிதுன் தாக்கூர் என்ற 22 வயது இளைஞர் மே 11 அன்று உயிரிழந்தார். புதன்கிழமை தாக்கூர் இறந்த செய்தியைக் கேட்டதும், அவரது காதலியான சுமையா கடிவார் என்ற 18 வயது முஸ்லிம் பெண்ணும் தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். எனினும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் உயிர் பிழைத்தார். சுமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான் இதன் பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது. இவர்களது மதங்களுக்கிடையேயான உறவை ஏற்காத சுமையாவின் சகோதரன் சாகீர், தனது மூன்று நண்பர்களுடன் தாக்கூரின் வீட்டிற்கு மே 9ம் தேதியன்று சென்று அவரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பித்து விட்டார். மிதுன் தாக்கூர் தனது வீட்டில் மயங்கிக் கிடப்பதை அவரது பக்கத்து வீட்டுக்காரர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பலத்த காயங்கள் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மிதுன் தாக்கூரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சாகீர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை, முஸ்லிம் பெண்களைக் காதலித்த ஹிந்து ஆண்கள் மீது முஸ்லீம் குடும்பத்தினர் கொடூரமான தாக்குதல், கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் சுமார் இருபதுக்கும் மேல் பதிவாகியுள்ளது.