உத்கர்ஷ் சமரோஹ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுபார்வை குறைபாடுள்ள அரசுத் திட்ட பயனாளிகளிடம் உரையாடினார். அப்படி ஒரு பயனாளியின் மகளுடன் உரையாடும் போது உணர்ச்சிவசப்பட்டார். அந்த பயனாளியுடன் உரையாடுகையில், பிரதமர் அவரிடம் தங்களது மகள்களுக்கு கல்வி கற்பிக்கிறீர்களா? என்று கேட்டார், அதற்கு அவர், மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவராக விரும்புவதாக கூறினார். மகள் ஏன் மருத்துவத் தொழிலை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுத்தார்? என்று பிரதமர் மோடி கேட்டதற்கு, “எனது தந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக நான் மருத்துவராக விரும்புகிறேன்” என்று அந்த சிறுமி கூறினார். சிறுமியின் பதிலைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட பிரதமர், சில நிமிடங்கள் மௌனம் காத்தார். அந்த சிறுமியின் மனவலிமையைப் பாராட்டினார். “உங்கள் இரக்கம் உங்கள் பலம்,” என்று மோடி கூறினார்.