அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு ஜாதி மத பாகுபாடின்றி பொதுமக்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கலபாரில் வசிக்கும் டாக்டர் முகமது சமர் கஜினி என்பவர் தனது தனிப்பட்ட சொத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் சுமார் ரூ. 90 லட்சத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக கூறியுள்ளார். ராமர் கோயில் கட்டவும் முஸ்லிம்களும் அயோத்தி மற்றும் காவியை நேசிக்கிறார்கள் என்ற செய்தியை முஸ்லிம் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதற்காக இதனை செய்வதாகவும் சமர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவி உடை அணிந்து ரமலான் தொழுகையை நடத்தினார் சமர் கஜினி என்பதும் இவர் பா.ஜ.கவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.