தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5ல், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களில் முஸ்லிம்களின் கருத்தரித்தல் விகிதம் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்தி உள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4ல், ஒரு பெண்ணுக்கு 2.2 குழந்தைகள் என்று இருந்த நிலையில், தேசிய குடும்ப சுகாதார சர்வே 5ல், நாட்டின் ஒட்டுமொத்த கருத்தரித்தல் விகிதம் ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் கீழே குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அனைத்து மத சமூகங்களுக்கு இடையில், முஸ்லிம் சமூகத்தின் கருத்தரித்தல் விகிதம் மிக அதிகமாக 2.3 என்ற விகிதத்தில் உள்ளது. இது, ஹிந்து சமூகத்தில் 1.94 ஆக மட்டுமே உள்ளது. முன்னதாக, ஹிந்துக்களின் கருத்தரித்தல் விகிதம் 2015 – 16ல் 2.1 ஆகவும் 1992 – 93ல் 3.3 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல கிறிஸ்துவ சமூகத்தில் கருத்தரித்தல் விகிதம் 1.88 ஆகவும், சீக்கிய சமூகத்தில் 1.61, ஜெயின் சமூகத்தில் 1.6 மற்றும் பௌத்த மற்றும் நவ பௌத்த சமூகத்தில் 1.39 எனவும் கருத்தரித்தல் விகிதம் உள்ளது. கிராமப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் 1992 – 93ல் ஒரு பெண்ணுக்கு 3.7 குழந்தைகளாக இருந்துதற்போது 2.1 ஆக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் நகர்ப்புற பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.7லிருந்த் 1.6 ஆக குறைந்துள்ளது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4ல் 32 சதவீதமாக இருந்த பள்ளிப்படிப்பு இல்லாத முஸ்லிம் பெண்களின் சதவீதம் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5ல் 21.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஹிந்துக்களைப் பொறுத்தவரை, இது 31.4 சதவீதத்தில் இருந்து 28.5 சதவீதமாக குறைந்துள்ளது. மற்ற மதங்களைவிட 15 முதல் 19 வயதுடைய முஸ்லீம் பெண்களிடையே டீன் ஏஜ் கர்ப்பம் என்பது, 8 சதவீதம் என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது.