ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ் உடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித பகையும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்தனர். அப்போது இந்த செய்தியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்திடமும் பிரதமர் நரேந்திர மோடியிடமும் தெரிவிக்குமாறு கூறினேன். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆதரவற்ற பசுக்களுக்காக நடத்தப்படும் மாட்டு தொழுவங்களுக்கு அரசு மானியம் 6 மாதங்களுக்கு பதிலாக 9 மாதங்களுக்கு வழங்கப்படும். மாநில அரசு 1.56 கோடி ரூபாய் மானியத்தில் ஆதரவற்ற பசுக்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் பசுக் கொட்டகைகள் திறக்கப்பட்டு வருகின்றன’ என கூறினார்.