திராவிட, இடதுசாரி சிந்தனைகளுடன் கூடிய ‘யூ டூ புரூட்டஸ்’ என்ற யூடியூப் சேனல் வாயிலாக, தில்லை நடராஜப் பெருமான் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட “யூடூ பூரூட்டஸ்” என்ற யூடியூப் சேனலின் அந்தக் குறிப்பிட்ட வீடியோ தற்போது முடக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவபெருமானை ஆபாசமாக திரித்து பேசிய அந்த யூடியூபர் ‘மைனர் விஜய்’ மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மைனர் விஜயை கைது செய்ய வேண்டும் சேனலை முடக்க வேண்டும் என்று ஹிந்துக்கள், அரசியல் தலைவர்கள், சிவனடியார்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.