மின்சாரச் சட்டம் 11வது பிரிவைச் செயல்படுத்துவதன் மூலம் மின்சார நெருக்கடியைச் சமாளிக்க, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடிப்படையில் இயங்கும் அனைத்து அனல் மின் நிலையங்களையும் முழுத் திறனில் மின்சாரம் உற்பத்தி செய்ய உத்தரவிட்டு மின்சாரத் தட்டுப்பாட்டுப் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சாரச் சட்டத்தின் 11வது பிரிவின்படி, மத்திய அரசு அசாதாரணச் சூழ்நிலைகளில் எந்த ஒரு அனல் மின் நிலையத்தையும் அதன் வழிகாட்டுதலின்படி இயக்கவும் பராமரிக்கவும் உத்தரவிட முடியும். இந்த உத்தரவு மூலம் குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள இறக்குமதி நிலக்கரியில் இயங்கும் அனல் மின்நிலையத்தை கொண்டுள்ள எஸ்ஸார் பவர், கோஸ்டல் எனர்ஜென் உள்ளிட்ட நிறுவனங்கள் அவற்றை முழு கொள்ளளவில் இயக்க முடியும். இதன் மூலம் 7 ஜிகாவாட் மின் உற்பத்தியை செய்ய முடியும்.