தி.கவினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதற்கு ஹிந்து அமைப்புகள், பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறியிருந்த நிலையில், மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் வகையில், மே.22ம் தேதி தருமபுரத்தில் சந்திப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் ‘எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார். ‘பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!’ தமிழ் பண்பாட்டை சுமப்போம். மே 22ல் தருமபுரத்தில் சந்திப்போம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.