மேற்கு வங்கத்தில் மெட்ரோ டைரி நிறுவன பங்குகளை அம்மாநில அரசு தனியார் நிறுவனத்துக்கு விற்றதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறி மமதா பானர்ஜி அரசுக்கு எதிராக மேற்குவங்க காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மேற்கு வங்க அரசிடம் இருந்து பங்குகள் வாங்கிய தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார். காங்கிரஸ் எதிர்தரப்பில் உள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு எதிராக அவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார். இதற்கு மேற்குவங்க மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ப. சிதம்பரம் நீதிமன்றத்துக்கு வந்தபோது, இந்த வழக்கில் ஆஜராக கூடாது என அவரை மறித்தனர், கருப்பு ரிப்பன் காட்டினர், மம்தா பானர்ஜியின் தரகர் என விமர்சனம் செய்து சிதம்பரத்திற்கு எதிராக கோஷங்ளை எழுப்பினர்.