கன்னியாகுமரியில் கன்னியாகுமரி முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இங்கு இரு தரப்பினரிடையே பல வருடங்களாக பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு தரப்பினர் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தினர். இதையடுத்து இன்று மற்றொரு தரப்பும் தொழுகை நடத்த ஏற்பாடு செய்தது. இதன் காரணமாக பிரச்னை ஏற்படும் என கருதி இரு தரப்பினரையும் அழைத்து இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகிகள் காவல் நிலையத்தில் பேசிக்கொண்டிருக்கையில், வெளியே இருந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது. காவல் நிலைய வாசலிலேயே ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.