மதுரையில் நடைபெற்ற சௌராஷ்ட்டிரா மொழியில் பைபிள் புத்தகம் வெளியீடுட்டு நிகழ்வு அந்த சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌராஷ்ட்டிர மொழி பேசும் மக்கள் மதுரையில் நாலு லட்சத்திற்கும் அதிகமாக வாழ்கிறார்கள் சௌராஷ்ட்டிர மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. ஆகவே சில சமூக சிந்தனையாளர்களால் சௌராஷ்ட்டிரா எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது. ஆனால் சௌராஷ்ட்டிர மக்களிடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனிடையே சௌராஷ்ட்டிர சமூகத்தை சேர்ந்த ஏழ்மையான மக்களை மதமாற்றம் செய்யும் நோக்கில், மதுரை கீழவாசல் சி.எஸ்.ஐ சர்ச்சில், இந்தியன் பைபிள் டிரான்ஸ்லேட்டர் என்கிற அமைப்பின் சார்பில் சௌராஷ்ட்டிர மொழியில் பைபிள் வெளியிடப்பட்டது. இந்த கட்டாய மதமாற்ற நோக்கத்தை எதிர்த்து சௌராஷ்ட்டிர சமூகத்தினர் மதுரையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். சௌராஷ்ட்டிரா சமூக நலச்சங்கம் (எமனேஸ்வரம்), தமிழ்நாடு மஹா சௌராஷ்ட்டிர சபா, தமிழ்நாடு சௌராஷ்ட்டிர மக்கள் முன்னேற்ற பேரவை (திருப்புவனம்), சௌராஷ்ட்டிரா மத்திய சபை, ஸ்ரீமத் நடன கோபால நாயகி சுவாமிகள் ஆன்மிக இளைஞர் எழுச்சி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் சௌராஷ்ட்டிரா மக்கள் சமூக ஆர்வலர்கள், ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள், மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.